சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில், உலக மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் S K சாமி, மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே 2008ம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி மோதல் நிகழ்ந்ததாகவும், இச்சம்பவத்தின்போது மாணவர்களின் மோதலை தடுக்காமல், தமிழக காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த விவகாரத்தை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட், வழக்கின் விசாரணைக்கு மாநில காவல்துறை ஒத்துழைப்பு வழங்காததால் அறிக்கை அளிக்க கூடுதலாக 6 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதையும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இவ்வழக்கை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் S K சாமி கூறியுள்ளார்
No comments:
Post a Comment